search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ தேர்வு"

    • மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பில் 93.12சதவீதமும், 12-ம் வகுப்பு 87.33 சதவீதமும் பெற்றுள்ளன.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மண்டல அளவிலான தேர்ச்சியில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சென்னை 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

    12-ம் வகுப்பு தேர்வை 16,728 பள்ளிகளில் படித்த 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேர் எழுதினர். அவர்களில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்த தேர்ச்சி வீதம் 87.33 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சியில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வை 24,480 பள்ளிகளில் படித்த 21 லட்சத்து 65 ஆயிரத்து 805 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    அதில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.12சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.28 சதவீதம் குறைந்துள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வில் கணித தேர்வுதாள் கடினமாகவும், ஆங்கில தேர்வு விரிவானதாகவும் இருந்ததால் மாணவர்களால் வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை.

    இதனால் அவர்களால் சரியான விடை அளிக்க முடியாமல் மார்க் குறைந்துள்ளது.

    நேரடியாக வினாத்தாள் கேள்விகள் கேட்கப்படாமல் தந்திரமாக, மறைமுகமான கேள்விகள் ஏராளமாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான சென்டமே எடுத்துள்ளன.

    கணிதம் மதிப்பெண்கள் சரிவினால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் கட்ஆப் மார்க் 195-க்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    கணித பாடம் கஷ்டமாக இருந்ததால் மாணவர்கள் சுமார் 10 சதவீதம் அளவுக்கு குறைவான மார்க் பெற்றுள்ளனர்.

    கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் இந்த 2 பாடங்களிலும் மாணவர்கள் குறைவான மார்க் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இதுசம்பந்தமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்:-

    இந்த ஆண்டு கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் அதிக சிந்தனை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பாடத்தில் மாணவர்களின் மார்க் சதவீதம் குறைந்துள்ளது.

    வணிகம் உள்பட பிற துறைகளை சார்ந்த மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார்.

    • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
    • இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

     

    இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    • இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள்.
    • தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    சென்னை:

    நாடுமுழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    கடந்த 20-ந்தேதி பிரெஞ்சு பாடத்திட்டத்திற்கான தேர்வு நடந்தது. இன்று முதல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு தொடங்கி நடை பெறுகிறது.

    இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு எழுதினர்.

    இன்று ஒரேநாளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு தொடங்கி உள்ளது. 10-ம் வகுப்பிற்கு தமிழ் தேர்வும், 12-ம் வகுப்பிற்கு ஆங்கில தேர்வும் நடந்தன. 2 பொதுத்தேர்வுகளும் மாறி மாறி நடக்கின்றன.

    27-ந்தேதி 10-ம் வகுப்பு ஆங்கிலம், மார்ச் 4-ந்தேதி அறிவியல், மார்ச் 15-ந்தேதி சமூக அறிவியல், 17-ந்தேதி இந்தி, 21-ந்தேதி கணிதம் ஸ்டாண்டர்டு, கணிதம் பேசிக் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. 10-ம் வகுப்பிற்கு மார்ச் 21-ந் தேதியுடன் தேர்வு முடிகி றது. மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    28-ந்தேதி வேதியியல், மார்ச் 6-ந்தேதி கணிதம், 13-ந்தேதி உடற்கல்வியியல், 16-ந்தேதி உயிரியியல், 17-ந்தேதி பொருளாதாரம், 23-ந்தேதி கம்ப்யூட்டர், அறிவியல் மற்றும் இன்பர் மேஷன் பிராக்ட்டிஸ், 25-ந்தேதி பிசினஸ் படிப்பு, 31-ந்தேதி கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    சென்னையில் டி.ஏ.வி., எவர்வின் வித்யாஸ்ரமம், மகரிஷி, பவன்ஸ், எஸ்.பி. ஓ.ஏ., விவேகானந்தா உள்ளிட்ட பல்வேறு சி.பி. எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர்.

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்புதேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மண்டலத்தில் 97.37 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    சென்னை:

    மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 10-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் 5-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை நடத்தியது. இத்தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 24 ஆயிரத்து 682 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இந்த நிலையில் தேர்வு முடிவுகள் www.results.nic.in , www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது.

    சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு தேர்வில் டெல்லி அருகேயுள்ள குர்கான் பள்ளி மாணவர் பிரகார் மிட்டல் 500-க்கு 499 மதிப்பெண் எடுத்து முதல் இடம் பெற்றுள்ளார். 499 மதிப்பெண் எடுத்து உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் ஆர்.பி. பப்ளிக் பள்ளியை சேர்ந்த மாணவர் ரிம்ஷிம் அகர்வால் 2-வது இடத்தை பிடித்தார். 499 மதிப்பெண் பெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி சர்வதேசபள்ளி மாணவி நந்தினி கார்க் 3-வது இடத்தில் உள்ளார். 499 மதிப்பெண் எடுத்து 4-வது இடத்தை கேரளா மாநிலம் கொச்சி பவான்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்ரீலட்சுமி பெற்றார்.

    முதல் இடம் பெற்றவர் முதல் 4-வது இடம் பெற்றவர் வரை 500-க்கு 499 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதில் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் அவர்களுக்கு தரவரிசை கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்திய அளவில் மொத்தம் 14 லட்சத்து 8 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.70 சதவீத தேர்ச்சி ஆகும்.

    திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, அந்தமான்-நிகோபார் தீவுகள், டையூ -டாமன் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 97.37 சதவீதம் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அஜ்மீர் மண்டலம் 91.86 சதவீதம் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை சேர்ந்த மாணவர் தரணி கோவிந்தசாமி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று அந்த பள்ளியில் முதல் இடம் பெற்றார்.

    தரணி கோவிந்தசாமி, கிஷோர் ஞானேஸ்வரன்

    அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி ரித்து அலிஸ் செரியன் 500-க்கு 493 மதிப்பெண்ணும், மாணவர் பிரசாந்த் 492 மதிப்பெண்ணும் எடுத்து உள்ளனர் என்று பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி தெரிவித்தார். அவர்கள் உள்பட தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தார்.

    மேலும் அவர் கூறுகையில் எங்கள் பள்ளியில் முதல் மாணவி ரித்து எனது பள்ளி ஆசிரியை அனிதாவின் மகள் ஆவார் என்றும் தெரிவித்தார். இந்த பள்ளியில் 778 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 19 பேரும், கணிதத்தில் 8 பேரும், பிரெஞ்சு பாடத்தில் 5 பேரும், அறிவியல் பாடத்தில் 3 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் கே.மோகனா, தங்களது பள்ளியில் கிஷோர் ஞானேஸ்வரன் என்ற மாணவர் 500-க்கு 492 மதிப்பெண் எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.
    ×